Kadhal movie Flashback | காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
February 6, 2025
Kadhal movie Flashback | காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Published on: September 22, 2024 at 2:56 pm
Updated on: September 22, 2024 at 2:57 pm
Kadhal movie Flashback | இயக்குனர் பாலாஜி சக்திவேலின் டைரக்ஷனில் 2004ஆம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் காதல். இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாகவும், நாயகியாக சந்தியாவும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்துக்கு பின்னர் சந்தியாவுக்கு காதல் சந்தியா எனப் பெயர் வந்தது. அந்தளவு இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்றடைந்தது.
மெக்கானிக் முருகன் (பரத்) பள்ளி படிக்கும் மாணவி ஐஸ்வர்யாவை (சந்தியா) காதலிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் இந்தக் காதலை சேர்த்து வைப்பதாக கூறி ஐஸ்வர்யா பெற்றோர் முருகனை வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடுமை செய்வார்கள்.
சில காலங்களுக்கு பின்னர் முருகன் தெருக்களில் மன நலம் பாதிக்கப்பட்டவராக திரிவார். அவரை தனது கணவருடன் ஐஸ்வர்யா அழைத்துச் செல்வது போல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பள்ளிப் பருவ காதலை தூண்டும் படம் என ஆரம்பத்தில் இந்தப் படம் விமர்சனத்தை சந்தித்தாலும், இறுதியில் மனிதாபிமானத்தை பேசும் படமாக முதிர்ச்சியுடன் முடித்திருப்பார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
இந்தப் படத்தில் ஜோசுவா ஸ்ரீதர் இசையமைத்து இருந்தார். படத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதிலும், தொட்டு தொட்டு என்னை, உனக்கென இருப்பேன் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன.
இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சந்தியா இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படத்தில் கதாநாயகியாக முதலில் வரலட்சுமி நடிக்க இருந்துள்ளார். ஆனால் அவர் படித்து கொண்டிருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ்; பாடகி உடன் தொடர்பா? ஜெயம் ரவி விளக்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com