Muttiah Muralitharan | சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பிடித்த 3 கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் பேசியுள்ளார். கடந்த காலத்தில் அவர் பேசிய இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

February 17, 2025
Muttiah Muralitharan | சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பிடித்த 3 கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் பேசியுள்ளார். கடந்த காலத்தில் அவர் பேசிய இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
Published on: September 22, 2024 at 2:30 pm
Updated on: September 24, 2024 at 11:19 am
Muttiah Muralitharan | இலங்கை மலையக தமிழரான முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்தவர் ஆவார். ஆரம்ப நாள்களில் மிகவும் கடினமாக உழைத்து இலங்கை கிரிக்கெட் அகடமில் சேர்ந்தார். பின்னர் இவர் இலங்கை அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
இவரின் சாதனையை இன்றளவும் யாரும் வீழ்த்தவில்லை. இந்த நிலையில் தமிழ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முத்தையா முரளிதரனிடம் கிரிக்கெட்டில் உங்களுக்கு பிடித்த வீரர்கள் யார் என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முரளிதரன், “விவியன் ரிச்சார்ட் மற்றும் சச்சின் தெண்டுல்கர் என்றார். இதில் தாம் சச்சின் தெண்டுல்கர் ஆட்டத்தை ரசித்து பார்த்த நாள்களும் உண்டு” என்றார். தொடர்ந்து 3வது வீரர் குறித்து பேசுகையில் அந்தப் பட்டியலில் சில இளம் வீரர்கள் உள்ளனர்.
இவரை ஆஸ்திரிரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், “பந்துவீச்சின் டான் பிராட்மேன்” என வர்ணித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: சதம் அடித்த அஸ்வின்- ஜடேஜா அபாரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com