Director Mani Ratnam apologizes: தக் ஃலைப் திரைப்படத்தில் ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
Director Mani Ratnam apologizes: தக் ஃலைப் திரைப்படத்தில் ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
Published on: June 24, 2025 at 4:29 pm
சென்னை, ஜூன் 24 2025: நடிகர் கமல்ஹாசனின் க்ரைம் த்ரில்லர் படமான தக் லைஃப், பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தப் படம் மக்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், 19வது நாளில், படம் ஒரு நாள் வசூல் அடிப்படையில் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே ஈட்டியது. முந்தைய நாளில் படம் ரூ.3 லட்சம் வசூலித்ததை விட இது சுமார் 66% குறைவு.
மத கஜ ராஜாவை முந்தாத தக் ஃலைப்
இந்நிலையில், படத்தின் மொத்த இந்திய நிகர வசூல் இப்போது 48.13 கோடியாக உள்ளது. அந்த வகையில், இந்தப் படம் ரூ.50 கோடியைத் தாண்டுவதற்கு இன்னும் ரூ.1.87 கோடி தேவை. முன்னதாக இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.
இந்தப் படம் தற்போது 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த 7வது தமிழ்ப் படமாகும். 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த 6வது கோலிவுட் படமாக மாற, நடிகர் விஷாலின் மத கஜ ராஜாவின் வாழ்நாளைக் கடக்க இன்னும் 58 லட்சம் ரூபாய் தேவை எனக் கூறப்படுகிறது. அதாவது, இந்திய பாக்ஸ் ஆபிஸில் மத கஜ ராஜாவின் வாழ்நாள் சுமார் ரூ.48.71 கோடி எனக் கூறப்படுகிறது.
மணிரத்னம் மன்னிப்பு
இந்த நிலையில் தக் ஃலைப் பட விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குனர் மணி ரத்னம். இது குறித்து பேசிய அவர், “தக் ஃலைப் படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
ரசிகர்கள் நாயகன் போன்று படத்தை எதிர்பார்த்தார்கள். இதனால்தான் ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டது. கமலும் நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிம்பு, தனுஷூடன் புதிய படம்? மௌனம் கலைத்த வெற்றி மாறன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com