மலையாள நடிகர் சித்திக்குக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. எனினும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மலையாள நடிகர் சித்திக்குக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. எனினும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on: November 19, 2024 at 9:22 pm
Actor Siddique Case | துணை நடிகை பாலியல் பலாத்கார வழக்கில், மலையாள நடிகர் சித்திக்குக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (நவ.19, 2024) முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, மூத்த நடிகர் சித்திக் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.
2016 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டது. சித்திக்கின் வழக்கறிஞர் இந்த வாதத்தை முன்வைத்தார். இதனையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
இதற்கிடையில், இந்த விசாரணையில் சித்திக் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று கேரள காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தனது நிலை அறிக்கையில், மூத்த நடிகர் விசாரணைக்கு இடையூறாக இருப்பதாகவும், அவரது சமூக ஊடக கணக்குகளை நீக்குவது மட்டுமல்லாமல் மின்னணு சாதனங்களை அழித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
செப்டம்பர் 24 அன்று, கற்பழிப்பு வழக்கில் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்க முடியாது எனக் கூறியது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க 20 ஆண்டு சினிமா வாழ்க்கை; நயன்தாராவின் சொத்து மதிப்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com