Ajith Back With Heavy Heart : நடிகரும் ரேஸருமான அஜித் குமார், தனது தாயார் மறைவுக்கு பின்னர் கனத்த இதயத்துடன் பணிக்கு திரும்பியுள்ளார்.
Ajith Back With Heavy Heart : நடிகரும் ரேஸருமான அஜித் குமார், தனது தாயார் மறைவுக்கு பின்னர் கனத்த இதயத்துடன் பணிக்கு திரும்பியுள்ளார்.

Published on: June 5, 2026 at 12:35 pm
சென்னை, ஜுன் 5, 2026: அஜித் குமார் தனது தாயார் மோகினி மணி மறைவுக்குப் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். மே 30 அன்று 89 வயதில் அவர் காலமான நிலையில், ஜூன் 4 அன்று அஜித் தனது ரேசிங் பணிகளை “மனதில் கனத்த துயரத்துடன்” தொடர்ந்ததாக அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவுகள் உறுதிப்படுத்தின.
அஜித் குமார் ரேசிங் குழுவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், அவர் ரேசிங் உடையில் பங்கேற்கத் தயாராக இருப்பது காணப்பட்டது. அதல் “மனதில் கனத்த துயரம், மீண்டும் பணி.. வாழ்க்கை தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தது.
அந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். “அவர் இன்று உங்களுடன் பந்தயத்தில் இருக்கிறார்” எனவும், “இந்த வெற்றி உங்கள் அம்மாவுக்காக” எனவும் ரசிகர்கள் உணர்ச்சிபூர்வமாக கருத்துரைத்தனர்.
மோகினி மணி மறைவுக்குப் பிறகு, அஜித் குடும்பம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் தாயார் நீண்ட காலம் வாழ்ந்து, அனைவரின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர்” எனக் கூறப்பட்டு இருந்தது. சிந்தி சமூகத்தைச் சேர்ந்த அவர், இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் குடிபெயர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியவர் என்றும், தனது பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறியதை பெருமையாகக் கண்டவர் என்றும் குடும்பம் நினைவுகூர்ந்தது.
அஜித் குமார் கடந்த ஆண்டு “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” படங்களில் நடித்திருந்தார். தற்போது புதிய திரைப்பட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அவர் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தாயார் மறைவுக்குப் பிறகும், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரூ.225 கோடி கிளப்பில் திரிஷ்யம்-3.. வசூலில் தொடரும் மர்மம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com