Actress Malavika’s Favorite Hero: நடிகை மாளவிகா தான் எந்த நடிகரின் ரசிகை என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
Actress Malavika’s Favorite Hero: நடிகை மாளவிகா தான் எந்த நடிகரின் ரசிகை என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
Published on: February 24, 2025 at 12:25 am
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகை என கூறியுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், பா ரஞ்சித்தின் தங்களான் படத்தில் சூனியக்காரி வேடம் ஏற்றிருந்தார்.
யாரும் எதிர்பார்க்காத இந்த கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன், மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது இவர் நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து பேசிய மாளவிகா, ‘ இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானது; கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் பார்த்த சில படங்களில் கதாநாயகியின் கதாபாத்திரத்தை மிகவும் சிறியதாக காட்டுகிறார்கள். ஆனால் பிரபாஸ் படத்தில் அப்படி இல்லை’ என்றார்.
இதையும் படிங்க பாட்டு பட்டைய கிளப்பப்போகுது.. மீண்டும் அனிருத் – தனுஷ்
தொடர்ந்து தாம் நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகை என்ற மாளவிகா, ” பொதுவாக பிரம்மாண்ட படங்களில் இதெல்லாம் மிகவும் அரிதான விஷயங்கள்தான்; நான் இந்த படத்தில் இணைந்ததற்கு மேலும் ஒரு காரணம் உள்ளது.
நான் நடிகர் பிரபாஸின் தீவிரமான ரசிகை; அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுங்கால கனவு. இதனால்தான் நான் படத்திற்கு உடனடியாக ஓகே சொல்லி விட்டேன்” என்றார்.
நடிகை மாளவிகா சர்தார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க கரகாட்டகாரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com