Actress Divya Bharathi explains: திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன் என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்- பாடகி சைந்தவி விவாகரத்துக்கு நடிகை திவ்ய பாரதி காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
Actress Divya Bharathi explains: திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன் என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்- பாடகி சைந்தவி விவாகரத்துக்கு நடிகை திவ்ய பாரதி காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
Published on: April 3, 2025 at 10:39 am
நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்த வருபவர் திவ்யபாரதி. இவர் வெளியிட்டுள்ள அறிக்கை தான் சோசியல் மீடியாவில் தற்போது ஹைலைட்.
நடிகை திவ்யபாரதி சமீபகாலமாக கிசுகிசு ஒன்றில் சிக்கி உள்ளார். இந்த கிசுகிசு குறித்து அவர் விளக்கம் ஒன்றை அறிக்கையின் வாயிலாக அளித்துள்ளார். அந்த அறிக்கையில் திருமணம் ஆன ஆளுடன் நான் ஒருபோதும் டேட்டிங்கில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை திவ்யபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஒரு வதந்திக்கும் விளக்கம் தேவையில்லை; ஆனாலும் இது எனது தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை பாதிக்கிறது.
நான் எந்த நடிகருடனும் டேட்டிங்கில் ஈடுபட மாட்டேன்; அதிலும் குறிப்பாக திருமணமான ஆணுடன் டேட்டிங்கில் ஈடுபட மாட்டேன். இந்த விவகாரம் தற்போது எல்லை மீறி போய் உள்ளது.
ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளால் எனது நற்பயிருக்கு களங்கம் ஏற்படுகிறது. இதை இனியும் அனுமதிக்க முடியாது” தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஒரு சுதந்திரமான பெண் என்பதை சுட்டிக்காட்டி உள்ள நடிகை திவ்ய பாரதி, “எனது எல்லையை மதிக்க வேண்டும்; இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை” தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் இந்த சுருதி நாராயணன்?வீடியோ சர்ச்சையில் சிக்கிய தமிழ் நடிகை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com