GT4 European Car Race: பெல்ஜியத்தில் நடைபெறும் ஜி டி 4 ஐரோப்பிய கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
GT4 European Car Race: பெல்ஜியத்தில் நடைபெறும் ஜி டி 4 ஐரோப்பிய கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Published on: April 21, 2025 at 2:49 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் சிறந்த கார் பந்தய வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்னி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில், தற்போது அஜித்குமார் பங்கேற்ற ஜி டி 4 யுரோப்பியன் சீரிஸ் கார் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பெல்ஜியத்தில் நடைபெறும் ஜி டி 4 ஐரோப்பிய கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார்பந்தய போட்டியில் அவரது அணி மூன்றாவது இடம் பிடித்தது. இத்தாலியில் நடைபெற்ற பன்னிரண்டாவது மிச்சலின் முகெல்லோ கார்பந்தயத்திலும் அஜித்குமார் அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது.
இந்நிலையில் தற்போது ஜிடி 4 யூரோப்பியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அஜித் குமார் பல ஆண்டுகளாக சர்வதேச பந்தயங்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். விளையாட்டு காரணமாக சமீபத்தில் பல காயங்களை எதிர்கொண்ட போதிலும், அவர் தொடர்ந்து வலுவாகத் திரும்பி வந்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமைமிக்க தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய பந்தய மேடையில் ஆர்வம், துல்லியம் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று. என்று குறிப்பிட்டள்ளார்.
A proud moment for Indian motorsport❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻#AjithKumar sir and his team secure a remarkable P2 podium finish at the prestigious Spa Francorchamps circuit in Belgium🏆🏆🏆🏆🏆🏆🏆🏆A testament to passion, precision, and perseverance on the global racing… pic.twitter.com/neJRf11Ia9
— Adhik Ravichandran (@Adhikravi) April 20, 2025
இதையும் படிங்க வெளிநாட்டில் கார் பந்தயம்; விபத்தில் சிக்கிய அஜித் குமார் கார்.. சிறிய காயம் எனத் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com