Warren Buffett 6 rules | உலக தொழிலதிபர் வாரன் பஃபெட் கடைபிடிக்கும் 6 முதலீடு விதிகள் இங்குள்ளன.
Warren Buffett 6 rules | உலக தொழிலதிபர் வாரன் பஃபெட் கடைபிடிக்கும் 6 முதலீடு விதிகள் இங்குள்ளன.
Published on: November 9, 2024 at 12:01 pm
Warren Buffett 6 rules | வாரன் பஃபெட் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது 94 வயதாகும் பஃபெட், தனது குறிப்பிடத்தக்க வெற்றிக்கு சில விதிகளை வைத்திருந்தார்.
1) பணம் ஒருபோதும் நல்ல முதலீடு அல்ல
இந்தக் கொள்கை பஃபெட்டின் பரந்த முதலீட்டுத் தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது: பணத்திலிருந்து வெளியேறி சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார். மேலும், “பணம் எதையும் உற்பத்தி செய்யாது, காலப்போக்கில் அது மதிப்பை இழக்கும் என்பது உறுதி” என்கிறார் வாரன் பஃபெட்.
2) உற்பத்தி சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்
உலகில் உள்ள அனைத்து தங்கத்தையும் நீங்கள் சொந்தமாக வைத்திருக்கலாம்; நிலங்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது எதையும் உற்பத்தி செய்யாது. தொடர்ந்து, ஒரு வணிகத்தில் முதலீடு செய்யும் போது, பஃபெட் நீண்ட கால சிந்தனையை கருத்தில் கொள்ள சொல்கிறார்.
3) திறமை
பஃபெட்டின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, உங்கள் பலத்தை அறிந்து அவற்றைக் கடைப்பிடிப்பது ஆகும். அதாவது, உங்கள் வட்டம் எவ்வளவு பெரியது என்பதல்ல; அது சுற்றளவு எங்குள்ளது என்பதை அறிந்து, செயல்பட வேண்டும்” என்பார்.
4) நிறுவன மதிப்பீடு
முதலீடு செய்வதற்கான பஃபெட்டின் அணுகுமுறை மதிப்பில் வேரூன்றியுள்ளது. அவர் சந்தை விலையில் கவனம் செலுத்துவதில்லை; மாறாக, அவர் நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை முதலில் மதிப்பிடுகிறார்.
5) வாய்ப்புகளை வீணடிக்க கூடாது
பெரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது செல்வத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது என்று பஃபெட் வலியுறுத்துகிறார். மேலும், வாய்ப்புகளை வீணடிக்க கூடாது என்பதும் அவர் கருத்து.
6) நீங்களே முதலீடு செய்யுங்கள்
நிறைவாக, “நீங்கள் செய்யக்கூடிய சிறந்த முதலீடு உங்களுக்கே. அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது – பணவீக்கமோ அல்லது வரிகளோ இல்லை” என்பதும் வான் பஃபெட்டின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
இதையும் படிங்க சற்று குறைந்த தங்கம் : இன்றைய நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com