Large Cap Mutual Fund | கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன.
Large Cap Mutual Fund | கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன.
Published on: October 13, 2024 at 1:13 pm
Large Cap Mutual Fund | கடந்த 5 ஆண்டுகளில் 9 மியூச்சுவல் பண்டு திட்டங்கள் 19 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் ஆண்டு வருமானத்தை அளித்துள்ளன. மார்னிங் ஸ்டார் தரவுகளின்படி, கடந்த கால வருமானத்தை ஆய்வு செய்யும் போது, லார்ஜ் கேப் ஃபண்டுகள் 19.23 சதவிகிதம் ஐந்தாண்டு வருமானத்தை அளித்துள்ளது. முதலீட்டாளர்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், அதே பிரிவில் உள்ள ஒத்த திட்டங்களின் கடந்தகால வருமானத்தை ஆராய்வார்கள்.
இது திட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி திறன் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. நிதி ஆலோசகர்கள் முதலீட்டாளர்களுக்கு முந்தைய வருவாயில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கூறினாலும், கடந்தகால வருமானம் சில்லறை முதலீட்டாளர்களின் முதலீட்டு முடிவுகளை பாதிக்கும். லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கிய கடந்த ஐந்தாண்டுகளின் வருமானத்தை இப்போது பார்க்லாம். முதலில் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது செபியின் மியூச்சுவல் நிதி திட்டங்களின் வகைப்பாட்டின் படி, குறைந்தபட்சம் 80 சதவீத சொத்துக்களை லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களைக் குறிக்கிறது. மொத்த சொத்து அளவு ரூ. 3.79 லட்சம் கோடியுடன் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவில் 32 திட்டங்கள் உள்ளன. இந்தச் சொத்து அளவில், செப்டம்பர் 2024ல் மட்டும் ரூ. 1,769 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
மார்னிங் ஸ்டார் தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 19 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் ஆண்டு வருமானத்தை அளித்துள்ள லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
லார்ஜ் கேப் ஃபண்டுகள் | 5 வருட வருமானம் (%) | AUM ( ₹கோடி) |
---|---|---|
ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் | 21.38 | 64,835 |
HDFC டாப் 100 ஃபண்ட் | 20.07 | 37,522 |
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் | 22.35 | 34,187 |
ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் | 19.77 | 30,593 |
கனரா ரோபெகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் | 19.97 | 15,021 |
பரோடா பிஎன்பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்ட் | 19.94 | 2,407 |
பந்தன் லார்ஜ் கேப் ஃபண்ட் | 19.64 | 1,736 |
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் | 20.20 | 1,283 |
எடெல்வீஸ் லார்ஜ் கேப் ஃபண்ட் | 19.49 | 1,101 |
அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது போல், கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச வருமானத்தை நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் (22.35 சதவீதம்) வழங்கியது. சிறந்த செயல்திறன் கொண்ட லார்ஜ் கேப் மியூச்சுவரல் ஃபண்டுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீத லாபத்தை அளித்தன. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் யாராவது ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அது ரூ. 2.48 லட்சமாக அதிகரிக்கும்.
கடந்தகால வருமானங்கள் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். கடந்த கால வருமானத்தின் மூலம் பெரும் குறிப்புகள், எதிர்காலத்தில் தொடரலாம், தொடராமலும் போகலாம்.
இதையும் படிங்க SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com