Mutual Funds | நடப்பாண்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்டுகள் அதிகப்பட்சமாக 84 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Mutual Funds | நடப்பாண்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்டுகள் அதிகப்பட்சமாக 84 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.
Published on: September 18, 2024 at 6:59 pm
Mutual Funds | பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக பல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 1 வருடத்தில் 84 சதவீதம் வருடாந்திர SIP வருமானத்தை (XIRR) வழங்கிய சிறந்த பரஸ்பர நிதிகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொன்றிலும் ரூ. 21,000 மாத எஸ்.ஐ.பி 1 வருடத்தில் எப்படி வளர்ந்திருக்கிறது என்பது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு திட்டத்தில் ரூ.500 முதல் முதலீட்டை தொடங்கலாம். இத்திட்டத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் முதலீடு, ஓராண்டில் ரூ.3,53,620 ஆக உயர்ந்துள்ளது.
எல்.ஐ.சி இன்ஃப்ரா ஃபண்டு
எல்.ஐ.சி இன்ஃப்ரா ஃபண்டு திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் முதலீடு ஓராண்டில் ரூ.3,52,448 ஆக உயர்ந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ பார்மா ஹெல்த்கேர் அண்ட் டயக்னோஸ்டிக் (பி.ஹெச்.டி) ஃபண்டு
ஐ.சி.ஐ.சி.ஐ பார்மா ஹெல்த்கேர் அண்ட் டயக்னோஸ்டிக் (பி.ஹெச்.டி) ஃபண்டு திட்டத்தில் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் முதலீடு ஓராண்டில் ரூ.3,45,782 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
டாடா இந்தியா பார்மா ஹெல்த்கேர் ஃபண்டு
டாடா இந்தியா பார்மா ஹெல்த்கேர் ஃபண்டு திட்டத்தில் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் முதலீடு ஓராண்டில் ரூ.3,37,057 ஆக உயர்ந்துள்ளது.
நிப்பான் இந்தியா நிஃப்டி 50 ஜூனியர்
நிப்பான் இந்தியா நிஃப்டி 50 ஜூனியர் திட்டத்தில் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் முதலீடு ஓராண்டில் ரூ.3,33,689 ஆக உயர்ந்துள்ளது.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.
இதையும் படிங்க 8.55 சதவீதம் வட்டி: பந்தன் வங்கி புதிய வட்டி விகிதம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com