சென்னை: வியாபாரிகள் சங்க விழா

Traders Association Festival |பூவிருந்தவல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் 35வது ஆண்டுவிழா புதன்கிழமை (அக்.2, 2024) நடைபெற்றது.

Published on: October 4, 2024 at 6:41 pm

Traders Association Festival | சென்னை பூவிருந்தவல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் 35வது ஆண்டுவிழா சங்கத் தலைவர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவக்கப்பட்ட விழாவில் முதலில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்று மருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டன. மதிய உணவுக்குபின் மாலையில் நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதையடுத்து, பேரமைப்பின் மாநிலத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி மற்றும் சங்க மூத்த வணிகர்கள் ஆகியோருக்கு மாலை அணித்து கௌரவித்தனர்.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com