Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (செப்.5, 2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
December 21, 2025
Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (செப்.5, 2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.

Published on: September 5, 2024 at 10:59 pm
Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செப்டம்பர் 5ஆம் தேதி வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 196 புள்ளிகள் அல்லது 0.24% சரிந்து 82,157 இல் நாள் வர்த்தகத்தை முடித்தது.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 55 புள்ளிகள் அல்லது 0.22% குறைந்து 25,144.25 இல் நிறைவடைந்தது. இருப்பினும், வங்கி நிஃப்டி 0.11% அல்லது 58 புள்ளிகள் உயர்ந்து 51,458.50 இல் முடிவடைந்தது.
நிஃப்டி மிட்கேப் 100 207.35 புள்ளிகள் அல்லது 0.35% உயர்ந்து 59,431 இல் நிறைவடைந்தது.
பங்குகள் நிலவரம்
டைட்டன், எல்டிஐமைண்ட் ட்ரீ, விப்ரோ, ஐ.டி.சி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டின. மறுபுறம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், பிரிட்டானியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com