எஸ்.பி.ஐ ஃபிக்சட் டெபாசிட் மூலம் ஓராண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
எஸ்.பி.ஐ ஃபிக்சட் டெபாசிட் மூலம் ஓராண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Published on: November 16, 2024 at 2:00 pm
Updated on: November 16, 2024 at 2:01 pm
SBI Fixed Deposit | ஓய்வூதியம் பெரும் மூத்த குடிமக்கள் பெரும்பாலும், குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டை செய்ய விரும்புகின்றனர். அதனால்தான் அவர்களில் பலர் ஃபிக்சட் டெபாசிட்டுகளில் (FDs) முதலீடு செய்வதை தேர்வு செய்கின்றனர்.
இந்த வகை முதலீட்டில், அவர்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். எனவே அவர்களின் தேவைகளின் அடிப்படையில், அவர்கள் ஓய்வுக்குப் பிந்தைய செலவினங்களைக் கணக்கிட்டு, அதற்கேற்ப பணத்தை முதலீடு செய்யலாம். சாதாரண குடிமக்களுக்கு வழங்குவதை விட வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
ஃபிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் முதிர்வுத் தொகையையும் பெறலாம். அவர்கள் விரும்பினால், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை திரும்பப் பெறலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வை (SBI) பொறுத்த வரையில், அதன் அனைத்து எஃப்.டி-க்களிலும், மூத்த குடிமக்களுக்கு அம்ரித் விருஷ்டி சிறப்பு எஃப்.டி- இல் அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது.
444 நாள் எஃப்.டி. மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. எஸ்பிஐயின் 1-, 3- மற்றும் 5-ஆண்டு மூத்த குடிமக்கள் எஃப்டிகளின் வட்டி விகிதங்கள் முறையே 7.30 சதவீதம், 7.25 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் ஆக உள்ளது.
மூத்த குடிமக்கள் எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டத்தில், 1, 3 மற்றும் 5 ஆண்டு எஃப்டிகளில் ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் முதலீடு செய்தால், அவர்களுக்கு முதிர்வுத் தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்கள் எஃப்.டி.
எஸ்.பி.ஐ. மூத்த குடிமக்கள் 1 ஆண்டு எஃப்.டி
எஸ்.பி.ஐ. மூத்த குடிமக்கள் 3 ஆண்டு எஃப்.டி
எஸ்.பி.ஐ. மூத்த குடிமக்கள் 5 ஆண்டு எஃப்.டி
இதையும் படிங்க உலகின் ‘டாப்’ 100 தொழிலதிபர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி எத்தனையாவது இடம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com