Reserve Bank of India: இந்தியன் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கையாக இந்தியன் வங்கிக்கு ₹1.61 கோடி அபராதம் விதித்துள்ளது.
Reserve Bank of India: இந்தியன் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கையாக இந்தியன் வங்கிக்கு ₹1.61 கோடி அபராதம் விதித்துள்ளது.
Published on: April 29, 2025 at 2:45 pm
புதுடெல்லி, ஏப். 29 2025: இந்தியன் வங்கி மற்றும் மகிந்திரா & மகிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அபராதம் விதித்துள்ளது. ஒழுங்குமுறை மீறல்கள் காரணமாக இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்கள், விவசாய கடன் (KCC) திட்டம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்கல் தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக இந்தியன் வங்கிக்கு ரூ.1.61 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மகிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ்
‘நான்-டெபாசிட் எடுக்கக்கூடிய முக்கியமான நிதி நிறுவனங்கள்’ மற்றும் ‘கேஒய்சி’ (KYC) வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக மகிந்திரா & மகிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு ரூ.71.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி மற்றும் மகிந்திரா & மகிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள், வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் / பரிவர்த்தனைகளின் செல்லுபடியாக்கத்தை குறிக்கவில்லை என்றும், ஒழுங்குமுறை மீறல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க எஸ்.பி.ஐ டூ ஐ.சி.ஐ.சி.ஐ வரை.. ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com