National Silk Sale Fair | டெல்லியில் தேசிய சில்க் விற்பனை கண்காட்சி நடந்தது.
National Silk Sale Fair | டெல்லியில் தேசிய சில்க் விற்பனை கண்காட்சி நடந்தது.
Published on: October 21, 2024 at 4:51 pm
National Silk Sale Fair | டெல்லியில் உள்ள ராஃபி மார்க், அரசியலமைப்பு கிளப்பில் தேசிய கண்காட்சி விற்பனை அக்.15ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சி விற்பனை அக்டோபர் 21ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுகள் முதல் வாரணாசி பட்டுகள் வரை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
மேலும் பல்வேறு வகையான உணவுப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதாவது கேரள நேந்திரம் பழம் சிப்ஸ், அல்வா முதல் பிரியாணி உணவுப் பொருள்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் பஞ்சாப் சில்க் மற்றும் வட இந்திய புடவை மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பெண்கள் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.
மேலும், பெண்கள் குடும்பம் குடும்பமாக இங்கு வந்து பார்வையிட்டு பொருள்களை பார்வையிட்டு வாங்கிச் செல்வதை பார்க்க முடிந்தது. இந்தக் கண்காட்சியில் கைத்தறி பொருள்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக விற்பனை கண்காட்சி அமைப்பாளர்கள் கூறினர்.
இதையும் படிங்க அன்லிமிடெட் டேட்டா அண்ட் காலிங்: ஜியோவின் இந்தத் திட்டம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com