National Girl Child Day 2025 | தேசிய பெண்கள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை ரூ.250 முதல் நீங்கள் தொடங்கலாம்.
National Girl Child Day 2025 | தேசிய பெண்கள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை ரூ.250 முதல் நீங்கள் தொடங்கலாம்.
Published on: January 24, 2025 at 3:41 pm
Sukanya Samriddhi Yojana : சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை 14 வயதுக்கு உட்பட்ட முதல் இரண்டு பெண் குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்குவதன் மூலம் உங்களது நிதி பயணத்தை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான வருவாய் பெறுவது எப்படி என்பதை அறிந்துக் கொள்வதற்கு முன், திட்டத்தின் வட்டி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் கல்விக்காக அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் 10 வயது வரையிலான பெண் குழந்தையின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது.
திட்டத்தின் தகுதிகள்
திட்டத்தின் அம்சங்கள் என்ன?
இந்தத் திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்கலாம். திட்டத்தில், குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ.250 ஆகும். அதேநேரத்தில், ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.1,50,000 ஆகும். இந்தக் கணக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது கணக்கு வைத்திருப்பவரின் திருமணத்தின் போது, முதிர்வு செய்துக் கொள்ளலாம்.
வரி விலக்கு
இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், நாட்டில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே மாற்றலாம். மேலும், திட்டத்தில் வரி விலக்கு சலுகையும் உண்டு.
திட்டம் தொடங்க தேவையான ஆவணங்கள்
லட்சக்கணக்கில் வருவாய் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் தற்போது 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை உங்கள் குழந்தையின் 5வது வயதில் தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதேபோல் திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் என எடுத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் ரூ.1,50,000 முதலீடு செய்து இருப்பீர்கள். வட்டியாக ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 839 கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 839 வருவாய் ஆக பெறுவீர்கள்.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வருவாய்.. போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com