High return post office scheme | போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி. திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வரை ரிட்டன் பெறலாம். அஞ்சல ஆர்.டி.க்கு 6.7 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
High return post office scheme | போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி. திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வரை ரிட்டன் பெறலாம். அஞ்சல ஆர்.டி.க்கு 6.7 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
Published on: January 5, 2025 at 1:48 pm
Updated on: January 5, 2025 at 2:15 pm
போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் | முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்.டி. திட்டம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. சிறிய தொகையில் பணத்தை சேமிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை சேமிக்கும் திட்டத்தை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இத்திட்டத்தில் டெபாசிட் செய்தால், சில வருடங்களில் லட்சக்கணக்கில் வட்டியுடன் தொகை கிடைக்கும். இது வாழ்க்கையில் அடுத்தகட்ட முயற்சிகளுக்கு பெரிதும் உதவும் வகையில் அமையும்.
ஆர்.டி. (Recurring Deposit) திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். ஆர்.டி.யை ரூ.100 இல் இருந்து தொடங்கலாம். மேலும், ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 டெபாசிட் செய்தால், இந்தத் திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.10,70,000 பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான தொகையை சேமிக்கலாம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
திட்டத்தின் பலன்களைப் பெற அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஒரு ஆர்.டி. கணக்கை திறந்து சிறிய தொகைகளை தவறாமல் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டியை வழங்குகிறது. இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களில் ரூ.10 லட்சம் சேமிக்கப்படும். இந்தத் தொகைக்கு வட்டியாக ரூ.1,70,492 பெறுவீர்கள். இந்த ஆர்டியை திறக்க, உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு மட்டுமே தேவைப்படும்.
தபால் அலுவலகத்தில் ஆர்.டி. கணக்கு தொடங்குவது எப்படி?
(Disclaimer: எந்த ஒரு முதலீட்டுக்கு முன்பும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரிடம் ஆலோசனைகள் பெற பரிந்துரைக்கப்படுகிறது.)
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com