ஒரு நாளைக்கு ரூ.48 கோடி வரை சம்பாதிக்கும் இந்திய தலைமை செயல் அதிகாரி யார் தெரியுமா? அவர் கூகுள் சுந்தர் பிச்சையோ அல்லது சத்ய நாதல்லாவோ அல்ல.
ஒரு நாளைக்கு ரூ.48 கோடி வரை சம்பாதிக்கும் இந்திய தலைமை செயல் அதிகாரி யார் தெரியுமா? அவர் கூகுள் சுந்தர் பிச்சையோ அல்லது சத்ய நாதல்லாவோ அல்ல.
Published on: January 4, 2025 at 10:58 pm
ஜக்தீப் சிங் | உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பணியாளராக இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் வளர்ச்சி கண்டுள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையின் படி, அவரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.17,500 கோடி ஆகும். அந்த வகையில் அவரின் தினசரி வருமானம் கிட்டத்தட்ட ₹48 கோடியாக உள்ளது.
அவர் யார்? எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்பது தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை. குவாண்டம்ஸ்கேப் நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜக்தீப் சிங் ஆவார்.
யார் இந்த ஜக்தீப் சிங்
ஜக்தீப் சிங், மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்தார்.
தொடர்ந்து, பெர்க்லி, ஹாஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பயின்றார். மேலும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இவர், ஹெச்பி, சன் மைக்ரோசிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஜக்தீப் சிங் குவாண்டம்ஸ்கேப்பில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பிப்ரவரி 2024 இல் சிவ சிவராமிடம் ஒப்படைத்தார். எனினும், அவர் இன்னும் நிறுவனத்தின் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
உயர் சம்பளம் எப்படி?
இந்த நிலையில், சிங்கின் தலைமையின் கீழ், குவாண்டம்ஸ்கேப் வேகமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சி அவரது குறிப்பிடத்தக்க சம்பளத் தொகுப்பிற்கும் பங்களித்தது, இதில் $2.3 பில்லியன் மதிப்புள்ள பங்கு அடங்கும்.
இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற சி.இ.ஒ.க்களாக கூகுள் சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாதெல்லாவை ஜக்தீப் சிங் பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com