Bhandara Factory Blast: மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bhandara Factory Blast: மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: January 24, 2025 at 3:04 pm
மகாராஷ்டிரா தொழிற்சாலை வெடி விபத்து : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பந்தாரா தொழிற்சாலை வெடி விபத்து காலை 11 மணியளவில் ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேர் வரை காயமுற்றனர் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாந்தா ஆலை அதிகாரிகள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டாரா ஆயுதத் தொழிற்சாலையில் இன்று காலை வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களுக்காக மீட்பு மற்றும் மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வெடிவெடிப்பின் போது ஒரு கூரை இடிந்து விழுந்தது, என்றும் குறைந்தது அதற்கு கீழ் 12 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதலமைச்சர் தேவந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
Many workers were feared dead after a massive blast was reported at an ordnance factory near #Maharashtra's #Nagpur on Friday morning.
— Hate Detector 🔍 (@HateDetectors) January 24, 2025
The explosion at the factory in Maharashtra's #Bhandara was of such an intensity that it was heard from 5 km away.
Rescue and medical staff are… pic.twitter.com/K9cATQvY58
மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. காயமுற்றவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மருத்துவ உதவிக்காகவும் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com