Buffalo Meat Exports: இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 2025-26 ஆம் நிதியாண்டில் 25.6% உயர்ந்து $5.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
Buffalo Meat Exports: இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 2025-26 ஆம் நிதியாண்டில் 25.6% உயர்ந்து $5.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.

Published on: August 19, 2026 at 11:33 am
புதுடெல்லி, ஆக.19, 2026: இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 2025-26 ஆம் நிதியாண்டில் 25.6% உயர்ந்து $5.1 பில்லியனாக உயர்ந்துள்ளது. 2026-27 இன் முதல் காலாண்டில் மட்டும் 66.6% வளர்ச்சி பெற்று $1.5 பில்லியனை எட்டியுள்ளது. இது இந்தியாவின் மிகச் சிறந்த வேளாண் ஏற்றுமதி பொருளாக மாறியுள்ளது.
இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 14.8 லட்சம் டன் எருமை இறைச்சி $4.8 பில்லியன் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அப்போது டன் ஒன்றுக்கு சராசரி மதிப்பு $3,240 ஆக இருந்தது. ஆனால் 2023-24 வரை அந்த மதிப்பு $2,700-$3,000 மட்டுமே இருந்தது. 2024-25 இல் மீண்டும் வளர்ச்சி தொடங்கி $4.1 பில்லியன் ஏற்றுமதி, டன் ஒன்றுக்கு $3,236 மதிப்புடன் நடந்தது.
2025-26 இல் ஏற்றுமதி $5.1 பில்லியனை எட்டியது. அதிலும் முக்கியமானது, டன் ஒன்றுக்கு கிடைத்த மதிப்பு $3,591 ஆக உயர்ந்தது. 2026-27 இன் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) டன் ஒன்றுக்கு $4,392 என்ற சாதனை மதிப்பு கிடைத்தது. இது இந்திய எருமை இறைச்சி உலக சந்தையில் அதிக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரம் உயர்ந்ததாக கருதப்படுவதை காட்டுகிறது.
2025 அக்டோபரில் இறைச்சி ஏற்றுமதி வளர்ச்சி நிதி உருவாக்கப்பட்டது. அதன்படி, குளிர்விக்கப்பட்ட எறுமை இறைச்சி ஏற்றுமதிக்கு டன் ஒன்றுக்கு ₹250 வரி வசூலித்து. அந்த நிதி மூலம் புதிய சந்தைகளை அடைய, தடைகளை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்க செலவிடப்படுகிறது.
இதனால் உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, ஜார்ஜியா, ஓமான், செனெகல் போன்ற புதிய சந்தைகளில் இந்திய எருமை இறைச்சி புகழ் பெற்றுள்ளது.
இந்த ஏற்றுமதி வளர்ச்சி இந்தியாவின் பால் பொருளாதாரத்துக்கும் பெரும் ஆதரவாக உள்ளது. பால் உற்பத்தி குறைந்த, வயதான எருமைகளை விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருவாயால் பால் உற்பத்தி அதிகம் தரும் இளம் எருமைகளை வாங்குவதற்கு விவசாயிகள் வசதி பெறுகின்றனர். இதனால் பால் உற்பத்தி திறன் மேம்படுகிறது. இந்தியாவில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதால், carabeef எனப்படும் எருமை இறைச்சி மட்டுமே உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
இதையும் படிங்க : வந்தாச்சு லலிதா ஜூவல்லரி மார்ட் ஐ.பி.ஓ.. முதலீடு செய்யலாமா? ஒரு பங்கு விலை எவ்வளவு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com