Fixed deposit: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.15 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
Fixed deposit: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.15 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
Published on: October 6, 2025 at 4:09 pm
சென்னை, அக்.6, 2025: வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள், பொது குடிமக்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் (FD) முதலீடுக்கு கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அதாவது, 0.25% முதல் 0.5% வரை கூடுதல் வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன. இதனால், பெரும்பாலும் மூத்தக் குடிமக்கள் ஓய்வு ஆண்டுகளில் நிலையான மற்றும் வழக்கமான வருமானத்தைப் பெற ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்கிறார்கள்.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்தக் குடிமக்களுக்கு 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.15 சதவீத வட்டியை வழங்குகின்றன.
வ.எண் | வங்கி | 3 ஆண்டுகால டெபாசிட் மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம் (%) |
01 | உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.15 |
02 | ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 7.75 |
03 | ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8 |
04 | ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 7.50 |
இதையும் படிங்க : ஆண்டுக்கு 25 சதவீதம் ரிட்டன்.. பெஸ்ட் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!
ஷிவாலிக் சிறு நிதி வங்கியும் அதன் மூன்று வருட நிலையான வைப்புத்தொகை காலத்திற்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தமட்டில் மூத்த குடிமக்களுக்கு அதன் 2-3 வருட நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 18 மாதங்கள் மற்றும் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, மூத்த குடிமக்களுக்கு அதன் மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு 8.15% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
(Disclaimer: ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு மட்டுமே காப்பீட்டு கடன் உத்தரவாதக் கழகத்தால் (DICGC) காப்பீடு செய்யப்படுகிறது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் கேட்டு அறிந்துக்கொள்வது நல்லது.)
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.11 லட்சம் ரிட்டன்.. இந்தப் ஃபண்ட் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com