Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

Published on: October 26, 2024 at 10:21 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,295 ஆகவும், பவுன் ரூ. 58,360 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து கிராம் ரூ. 7,360 ஆகவும் பவுன் ரூ. 58,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,865 ஆகவும் பவுன் ரூ. 62,920ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க
புதுடெல்லி மார்ச் 11, 2026; 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா ஒரு முக்கிய சர்வதேச வில்வித்தை போட்டியை நடத்த உள்ளது. 2027-ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெறும் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றை நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடைசியாக, 2005-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியே இந்தியா நடத்திய முக்கிய சர்வதேச வில்வித்தை நிகழ்வாகும். இந்த முடிவு, உலக வில்வித்தை ஆசியாவின் தலைவர் காஜி ராஜிப் உதின் அஹ்மத் சப்போல், மூன்று நாள் கொல்கத்தா பயணத்தின் போது, இந்திய வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் விரேந்திர சச்சதேவாவை சந்தித்து, வரவிருக்கும் சர்வதேச போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்ததன் பின்னர் எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: யார் இந்த அதிதீ? இஷான் கிஷனின், ‘வதந்தி காதலி’!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பாங்காக், மார்ச் 11 2026: ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், இன்று காலை 6:42 மணியளவில் 133 பயணிகளுடன் தாய்லாந்து சென்றது. தாய்லாந்து, புக்கெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது முன்பக்க சக்கரத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் தரையிறங்கும்போது விமானம் பலமாக மோதியதில் விமானத்தின் முன் சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 133 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
விமானத்தின் முன்பக்க சக்கரம் உடைந்துள்ளதால், விமானத்தை ஓடுதளத்தில் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஓடுதளத்தின் நிலைமை குறித்து விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க; இந்தியாவில் முதன்முறை.. உத்தரப் பிரதேச இளைஞரை கருணைக் கொலை அனுமதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
மதுரை, மார்ச் 11 2026, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கும் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது.
போர் பாதித்த நாட்டில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் ஆர். சஹாயா ஜெனிஷ் ராஜ் மற்றும் ஜே. ஜூட்லின் ஆகியோரைக் காப்பாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கன்னியாகுமரியில் இருந்து அவர்களின் சகோதரர்கள் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நடந்துகொண்டிருக்கும் தொடர் மோதலின் காரணமாக தற்போது வெளியேற்றம் சாத்தியமில்லை என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், ஈரான் அரசு தற்காலிகமாக அனைத்து துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் மூடியிருப்பதாக கூறப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ஆஜராகிய துணை சட்டத்தரணி கே. கோவிந்தராஜன், நீதிபதி டி. பரத சக்ரவர்த்தியிடம், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும், அங்கு வசிக்கும் மக்களுக்காக உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் உறுதியை பதிவு செய்து, நீதிபதி மனுக்களைத் தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரர்களின் சகோதரர்கள் தங்களது விவரங்களை தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க : மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் வழங்க முன்வரும் திமுக? தொகுதி பங்கீட்டில் இழுபறி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை மார்ச் 11, 2026; சிபிஎம், திமுகவின் சலுகையை நிராகரித்து, 5 இடங்களுக்கு மேல் கோரியுள்ளது; 6 இடங்களில் சமரசம் செய்ய வாய்ப்பு உள்ளது. 2021-இல் சிபிஎம் போட்டியிட்ட அதே 6 இடங்களை வழங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இல்லையெனில், மிகக் குறைந்த அளவு கூடுதல் இடங்கள் வழங்கப்படலாம். சிபிஎம் கூட்டணி கட்சிக்கு இடங்களை அதிகரிக்க திமுக உறுதியாக மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் சிபிஎம், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதை விட குறைந்தபட்சம் சிறிய அளவு கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில், திமுக, சிபிஎமுக்கு 5 இடங்களை வழங்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, 2021-இல் சிபிஎம் போட்டியிட்ட இடங்களை விட ஒன்றால் குறைவானது. பேச்சுவார்த்தை குழுவில் இருந்த சிபிஎம் தலைவர்கள், இடங்களை பெரிதாக அதிகரிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் சிறிய அளவு கூடுதல் இடங்களை வழங்க திமுக பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க; சாம்பாரில் பல்லி… 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு வாந்தி மயக்கம்!
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், திமுகவின் நிலையை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்றாலும், குறைவான இடங்களை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். ‘திமுக முன்னணியில் மேலும் கூட்டணி கட்சிகள் இணைந்துள்ளதால், குழு எங்களுக்கு இடங்களை குறைக்கச் சொல்லியுள்ளது. அவர்களின் நிலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால் அதே நேரத்தில், குறைந்தபட்சம் சிறிய அளவு கூடுதல் இடங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை முதல்வருடன் ஆலோசித்து, நாளை (புதன்கிழமை) எங்களுக்கு தெரிவிப்பதாக கூறினர். பேச்சுவார்த்தை நாளையும் மீண்டும் தொடங்கும்,’ என்று சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க; திருச்சி மாநாடு.. ரூ. 5650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பெங்களூரு, மார்ச் 11, 2026: தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என பல துறைகளில் பணியாற்றியவர் தக்காளி சீனிவாசன். 66 வயதான இவர் உடல்நலக் குறைவு காரணமாக சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.
தக்காளி சீனிவாசன் தமிழில் வெளியான இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளை மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம், அடுத்தது உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் நாளை மனிதன், வலது காலை வைத்து வா, அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், புதிய ஆட்சி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும், சூரசம்ஹாரம், நாளை மனிதன், சிறையில் சில ராகங்கள், ஜென்ம நட்சத்திரம், விட்னஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கையின் இறுதி காலங்களில் ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்த அமீர்கான் படத்த தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டீங்களா…கவலைய விடுங்க… ஓடிடில வந்தாச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com