இந்த அமீர்கான் படத்த தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டீங்களா…கவலைய விடுங்க… ஓடிடில வந்தாச்சு!

Aamir Khan: அமிர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

Published on: March 11, 2026 at 3:32 pm

மும்பை, மார்ச் 11 2026: ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் உருவான ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை அமிர்கான் தயாரித்து கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜெனிலியா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம், 2007ஆம் ஆண்டு அமிர் கான் இயக்கி நடித்த ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. ஸ்பெயின் நாட்டில் வெளியான ‘சாம்பியன்ஸ்’ என்ற படத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில், ஓய்வு பெற்ற கூடைப்பந்து பயிற்சியாளராக வரும் அமிர்கான், மாற்றுத்திறனாளி வீரர்கள் கொண்ட அணியை ஒரு முக்கிய போட்டிக்காக பயிற்சி அளித்து தயார் செய்வதே மையக்கருவாக அமைந்துள்ளது. இதற்காக உண்மையான மாற்றுத்திறனாளி நபர்களே படத்தில் நடித்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை இதுவரை அமீர் கான் வழங்காமல் வைத்திருந்தார்.

பின்னர், ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை குறிப்பிட்ட தொகை செலுத்தி பார்க்கும் வகையில் யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமையை சோனி லைவ் (SonyLIV) தளத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதனை அந்த நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் “விரைவில் வெளியாகிறது” என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனுசுக்கு கை கொடுக்கும் உச்ச நட்சத்திரம்.. பரபரக்கும் கோடம்பாக்கம்!

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com