ரூ.2 லட்சம் கோடி சந்தை.. இந்தியாவின் முதுகெலும்பு தொழில் தெரியுமா?

Footwear Industry ; இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு காலணித் தொழில் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

Published on: April 8, 2026 at 11:03 am

Updated on: April 8, 2026 at 11:06 am

புதுடெல்லி, ஏப்.8, 2026: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், காலணித் தொழில் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனக் குறிப்பிட்டார்.

புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7, 2026) காலணித் தொழில் பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தத் துறையின் சந்தை அளவு சுமார் 1.5 முதல் 2 இலட்சம் கோடி ரூபாய் வரை இருப்பதோடு, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது என்றும் கூறினார்.

தொடர்ந்து, மத்திய அரசின் முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் தொழில்நுட்ப நெய்தலை ஊக்குவிக்க 10,600 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இணைப்பு ஊக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காலணித் தொழில் இன்னும் மூலப்பொருட்கள் மற்றும் தரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இச்சவால்களைத் தீர்த்து, தொழிலை மேலும் உயிர்ப்புடன் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: 5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர் விற்பனை மளமளவென உயர்வு.. மத்திய அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com