Mutual Fund | கடந்த 5 ஆண்டுகளில் 51 சதவீதம் வரை வளர்ச்சி கொடுத்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் இங்குள்ளன.
Mutual Fund | கடந்த 5 ஆண்டுகளில் 51 சதவீதம் வரை வளர்ச்சி கொடுத்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் இங்குள்ளன.
Published on: September 7, 2024 at 1:43 pm
Mutual Fund | இந்தியா போன்ற வளரும் நாட்டின் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதில் இடர்கள் அதிகமாக இருந்த போதிலும், லாபத்தை கணக்கில் கண்டு இதில் முதலீடு செய்கின்றனர்.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களும் மற்ற முதலீட்டு திட்டத்தை விட நல்ல வருவாயை கொடுக்கின்றன. தற்போது நாம் கடந்த 5 ஆண்டுகளில் 51 சதவீதம் வரை வளர்ச்சி கொடுத்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 51.6 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது. மாதாந்திர ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
குவாண்ட் இன்ஃப்ராஸ்டர் ஃபண்டு
குவாண்ட் இன்ஃப்ராஸ்டர் ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 44.43 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளது. இந்தப் ஃபண்டில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.17.53 லட்சமாக உயர்ந்துள்ளது.
குவாண்ட் மிட் கேப் ஃபண்டு
குவாண்ட் மிட் கேப் ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 40.47 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது. மாதாந்திர ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.16 லட்சமாக உயர்ந்துள்ளது.
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 38.38 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது. மாதாந்திர ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15.26 லட்சமாக உயர்ந்துள்ளது.
குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு கடந்த 5 ஆண்டுகளில் 38 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது. மாதாந்திர ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15.14 லட்சமாக உயர்ந்துள்ளது.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
இதையும் படிங்க : ‘ட்ரம்ப் தனக்காக போராடுகிறார்; அமெரிக்க மக்களுக்காக அல்ல’- கமலா ஹாரிஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com