Senior Citizen Saving Scheme | மூத்தக் குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வரை வருமானம் கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம் தெரியுமா?
February 6, 2025
Senior Citizen Saving Scheme | மூத்தக் குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வரை வருமானம் கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம் தெரியுமா?
Published on: August 28, 2024 at 3:40 pm
Senior Citizen Saving Scheme | பாதுகாப்பான வருமானத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கு மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.20,500 வரை வருமானம் பெறலாம். இத்திட்டமானது 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும்.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1,000 முதல் முதலீடு செய்ய தொடங்கலாம். 60 வயதிற்கு மேலுள்ள மூத்தக் குடிமக்கள் மற்றும் 55-60 வயதுக்குள் வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
அதுவே, தேச பாதுகாப்பு பணியில் பணியாற்றியவர்களுக்கு 50 வயதுக்குப் பிறகு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். கணவர் மற்றும் மனைவி இணைந்து கூட்டுக் கணக்கை கூட திட்டத்தில் தொடங்க முடியும்.
ரூ.1000 முதல் முதலீடு
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சலக கிளைகளிலும் தொடங்கலாம். குறைந்தப்பட்மாக ரூ.1000 முதலீடு செய்தால் போதுமானது.
அதேநேரத்தில் அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யலாம்.
ரூ.20,500 வருவாய் பெறுவது எப்படி?
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ஆகவே இத்திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு வட்டியாக ரூ.2.46 லட்சம் கிடைக்கும்.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பெறலாம்.
எனவே, ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக அமையும்.
இதையும் படிங்க : 400 நாள்கள் எஃப்.டி; 8 சதவீதம் வட்டி: TMB புதிய ஸ்கீம் தெரியுமா?
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com