Deepavali muhurat trading | இந்து நாட்காட்டி ஆண்டு சம்வத் 2081 இன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளி முஹுரத் வர்த்தகம் நடைபெறும் என தேசிய பங்குச் சந்தைகள் (NSE) அறிவித்துள்ளது. இதேபோல் மும்பை பங்குச் சந்தையும் அறிவித்துள்ளது. இரு வணிக சந்தைகளும் தனித்தனியே செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி திருவிழா, அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் நிலையில் தீபாவளி முகூரத் வணிகம் நவ.1ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, பங்குச் சந்தைகள் சாதாரண வர்த்தகத்திற்கு மூடப்பட்டிருக்கும். ஆனால் சிறப்பு வணிகம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளியன்று முகூரலத் வர்த்தகத்தை முன்னிட்டு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு நடைபெறும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை வர்த்தகம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வத்தின் தெய்வத்தை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபாவளி, புதிய வாங்குதல்களுக்கு ஒரு நல்ல நாளைக் குறிக்கிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்றவற்றை வாங்குவது, இந்த புனித நாளில் முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் 25% ரிட்டன்: இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பாருங்க!
Narendra Modi: பீகார் சட்டமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்….
Ravi Naik passes away: கோவா வேளாண் அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ரவி நாயக் மாரடைப்பால் காலமானார்….
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.16, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
MK Stalin: “எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்