Mutual Fund | நான்கு ஆண்டுகள் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீட்டில் ரூ.8.51 லட்சம் வரை லாபம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Mutual Fund | நான்கு ஆண்டுகள் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீட்டில் ரூ.8.51 லட்சம் வரை லாபம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
Published on: September 13, 2024 at 6:31 pm
Mutual Fund | பரோடா பிஎன்பி பரிபாஸ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் சந்தையில் அதன் நான்கு ஆண்டு வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்துள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு வருடாந்திர அடிப்படையில் 29% க்கும் அதிகமான வருமானத்தை கொடுத்துள்ளது. அதாவது, செப்டம்பர் 4, 2020 அன்று தொடங்கப்பட்டதில் இருந்து 182% முழுமையான வருமானத்தையும் வழங்கி வரு0கிறது.
பரோடா BNP பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்
மும்பை பங்குச் சந்தை (BSE) 250 லார்ஜ் மிட்கேப் மொத்த வருவாய் குறியீட்டின் மூலம் வழங்கப்பட்ட 40.31% க்கு எதிராக இந்தத் திட்டம் கடந்த ஓராண்டில் 49.78% அதிகரித்துள்ளது.
அதன் மூன்று ஆண்டு வருவாய் அளவுகோலின் 18.16% க்கு எதிராக 22.04% ஆகும். அதாவது, இந்த 4 ஆண்டுகளில், அளவுகோல் 26.27% அதிகரித்துள்ளது.
ரூ.8.51 லட்சம் ரிட்டன்
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 மாதாந்திர SIP ஆனது ஆகஸ்ட் 31, 2024 அன்று ரூ.8.51 லட்சமாக வளர்ந்து உள்ளது. இந்தத் திட்டம் தலா குறைந்தபட்சம் 35% லார்ஜ் கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
இதையும் படிங்க : கேரள லாட்டரி நிர்மல் NR-397: முதல் பரிசு ரூ.70 லட்சம் யாருக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com