புதுடெல்லி, பிப்.5, 2026: 2004க்குப் பிறகு முதல் முறையாக, பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, பிரதமரின் பதில் இல்லாமல், மக்களவையில் வியாழக்கிழமை (பிப்.5, 2026) நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு புதன்கிழமை பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர்ந்து நடந்த இடையூறு மற்றும் கோஷங்களால், சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியபோதும், வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவை அமர்வு, I.N.D.I.A கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை குறிவைத்து கோஷம் எழுப்பியதால் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியினர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உரையாற்றும் உரிமை மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.
2020 இந்திய-சீன எல்லை மோதல் குறித்து ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்பை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மேற்கோள் காட்ட அனுமதிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை (பிப்.3, 2026) மக்களவையில் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேஷன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
2004ல் மன்மோகன் சிங்
முன்னதாக 2004ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாரதிய ஜனதா அவர் உரை நிகழ்த்த இடைஞ்சல் செய்ததாக கூறி அவர் பேச்சை தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீக்கிய அமைச்சரை துரோகி என்ற ராகுல்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு!
Ruckus in Lok Sabha: வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….
Congress MP Rahul Gandhis ‘gaddar’ jibe: சீக்கிய அமைச்சரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் கூறியுள்ளார்….
M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….
PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்…
Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…
Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த…