பெங்களூரு, ஆக.19 2025: கர்நாடகா மாநிலத்தின் தாவங்கேரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடித்த 4 வயதான சிறுமி, செவ்வாய்க்கிழமை (ஆக.19 2025) பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கடுமையான ரேபிஸ் நோய் பாதிப்புகள் இருந்துள்ளன.
முன்னதாக, கதீரா பானு பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அவளைக் கடித்து குதறிவிட்டது.
அந்த நாய் அவளது முகத்தையும் உடலின் பிற பாகங்களையும் கடித்து இருந்தது. இதில் சிறமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவளை அவளது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாய் கடித்தால் ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
TCS: 2026ஆம் ஆண்டிலும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் தொடரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன….
DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்….
New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது….
The Raja Saab Box office : பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் 4ஆம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன….
Mutual funds: பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு குறித்து பார்க்கலாம். இதில், பி.பி.எஃப் பாதுகாப்பானது, அரசு உறுதி அளிக்கும் திட்டம், ஆனால் வருமானம் குறைவாக இருக்கும். எனினும்,…
Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது….