Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.
இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை
Thailand’s female prime minister suspended: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Hindu woman raped by local politician: வங்கதேசத்தில் இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி ஃபசூர் அலியை போலீசார் கைது…
Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…
Iranian missile strikes: இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்