Kasthuri controversial speech | சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Kasthuri controversial speech | சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on: November 17, 2024 at 6:16 pm
Kasthuri controversial speech | தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி நவம்பர் 3ஆம் தேதிஹிந்து அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி (50) தெலுங்கர்கள் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சை ஆகின.
தொடர்ந்து இந்த கருத்துக்களை திரும்ப பெற்ற நடிகை கஸ்தூரி, “தெலுங்கர்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல; எனது கருத்துக்களை முழுமையாக நான் திரும்பப் பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூரிலும், மதுரை திருநகர் காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனிடையே வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் வீட்டில் இருந்த அவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிக்கப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது, நடிகை கஸ்தூரி ‘அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்’ என கோஷம் எழுப்பினார்.
இதையும் படிங்க ஒ.டி.டி.யில் ஸ்பை த்ரில்லர் மூவீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com