Mutual Fund | கடந்த ஓராண்டில் 35 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன.
Mutual Fund | கடந்த ஓராண்டில் 35 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன.
Published on: November 12, 2024 at 9:58 pm
Mutual Fund | முதலீடு செய்ய முடிவெடுப்பதற்கு முன் ஒரு திட்டத்தின் கடந்தகால வருமானத்தை முதலீட்டாளர்கள் ஆய்வு செய்வது வழக்கம். ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள் அவற்றின் உயர் மதிப்பீட்டிற்கு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் போது, முதலீட்டாளர்கள் தங்கள் நியாயமான நடப்பு மதிப்பீட்டிற்காக லார்ஜ் கேப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள், குறைந்தபட்சம் 80 சதவீத சொத்துக்களை லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களைக் குறிக்கின்றன. நவம்பர் 8, 2024 நிலவரப்படி, கடந்த ஒரு வருடத்தில் ஏழு லார்ஜ் கேப் ஃபண்டுகள் 35 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
லார்ஜ் கேப் ஃபண்டுகள் | ஒரு வருட வருமானம் (%) | AUM ( ₹கோடி) |
---|---|---|
க்வாண்ட் லார்ஜ் கேப் ஃபண்டு | 37.54 | 2,577.89 |
டி.எஸ்.பி. டாப் 100 ஈக்விட்டி ஃபண்டு | 35.78 | 4,503.34 |
பந்தன் லார்ஜ் கேப் ஃபண்டு | 35.40 | 1,724.83 |
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்டு | 35.18 | 1,279.96 |
டாரஸ் லார்ஜ் கேப் ஃபண்டு | 34.91 | 50.22 |
ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்டு | 34.73 | 470.93 |
வைட்ஓக் கேப்பிடல் லார்ஜ் கேப் ஃபண்டு | 34.67 | 640.26 |
கடந்த ஒரு வருடத்தில் பந்தன் லார்ஜ் கேப் ஃபண்ட் 35.40 சதவீத வருமானத்தையும், குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட் 37.54 சதவீத வருவாயையும் கொடுத்துள்ளது.
சொத்து அளவிலிருந்து பார்க்கும்போது, மிகப்பெரிய ஃபண்டுகள் டி.எஸ்.பி. டாப் 100 ஈக்விட்டி ஃபண்டு மற்றும் குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்டு ஆகும். அதே சமயம் சிறியது டாரஸ் லார்ஜ் கேப் ஃபண்டு ஆகும்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் கடந்தகால வருமானம் அதன் எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. அதாவது, ஒரு மியூச்சுவல் ஃபண்டு சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டதால், அது எதிர்காலத்திலும் தொடர்ந்து செயல்படும் என்ற அவசியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
இதையும் படிங்க தினமும் ரூ.333 முதலீடு; ரூ.17 லட்சம் வருவாய்: இந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com