Delhi | டெல்லியில் கடந்த 15 நாள்களில் 3.87 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன.
Delhi | டெல்லியில் கடந்த 15 நாள்களில் 3.87 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன.
Published on: November 3, 2024 at 7:39 am
Delhi | தீபாவளி, சாத் பண்டிகைக் காலங்களில், டெல்லியில் மதுபான விற்பனை புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த 15 நாட்களில் 3.87 கோடி பாட்டில்கள் விற்பனை மூலம் ரூ.447.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவ. 2, 2024) தெரிவித்தனர். இதில், 89.48 லட்சம் பீர் பாட்டில்கள் ஆகும். மீதமுள்ள 2.98 கோடி இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் ஆகும்.
அதாவது, நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-அக்டோபர் 2024) வருவாயில் 7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2023ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.2,849 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாய் ரூ.3,047 கோடியை எட்டியுள்ளது.
மேலும், 2024 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் VAT உட்பட மொத்த கல வருவாய் ரூ. 4,495 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,188 கோடியாக இருந்தது.
இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “தற்போது மதுபானத்தின் மூலம் வருவாய் சீராக அதிகரித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க : பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி; 3 கி.மீ வரை வரிசை: 24 மணி நேரம் காத்திருப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com