Vijaya Bhaskar | 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் புகழ் மங்கிப் போகும் என முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Vijaya Bhaskar | 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் புகழ் மங்கிப் போகும் என முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Published on: November 3, 2024 at 8:00 am
Vijaya Bhaskar | தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மூத்தத் தலைவர்களுள் ஒருவருமான விஜய பாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சனிக்கிழமை (நவ.2,2024) நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, “2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் புகழ் மங்கிப் போகும்” என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய பாஸ்கர், “பளிச்சென்று இருக்கும் சூரியன் மழை மேகங்கள் வந்தவுடன் வெளிச்சமே இல்லாமல் மங்கி விடுவது போல 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரும் போது, ஆளும் திமுகவும் புகழ் மங்கிப் போகும்” என்றார். 2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது, வாரிசு அரசியல் விமர்சனத்தை வலுப்படுத்தியுள்ளது.
மேலும், நடிகர் விஜய்யும் தனது முதல் அரசியல் மாநாட்டில், திமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு நமது அரசியல் எதிரி எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கணக்கும் மாறும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய பாஸ்கர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com