Chennai | சென்னையில 9 கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்கி ஒரு மணி நேரம் விளையாட ரூ. 120 கட்டணம் வசூலிக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Chennai | சென்னையில 9 கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்கி ஒரு மணி நேரம் விளையாட ரூ. 120 கட்டணம் வசூலிக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Published on: October 30, 2024 at 12:58 pm
Chennai | சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டுத் திடலாக மாற்றி, ஒப்பந்த முறையில் பராமரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்: வியாசர்பாடி முல்லை நகர் மைதானம், நேவல் மருத்துவமனை சாலை மைதானம் திரு.வி.க.நகர் மைதானம், ரங்கசாய் மைதானம், கே.பி.பூங்கா மைதானம், மேயர் சத்தியமூர்த்தி சாலை டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம், அம்மா மாளிகை விளையாட்டு மைதானம் காமகோடி நகர் விளையாட்டு மைதானம், சோழிங்கநல்லூர் (ஓஎம்ஆர்) மைதான ஆகியவற்றில் செயற்கை புல் தரை அமைக்கப்படவுள்ளது. இதனால் ஏற்படும் நிதிசுமையை தவிர்க்க வருவாய்பகிர்வு அடிப்படையில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மைதானத்தில் விளையாடுவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு நபர் ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 1C நபர் விளையாடும் போது ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200 கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்து மாதம் ரூ.2.16 லட்சம் வருவாய் கிடைக்கும் இந்த 9 மைதானங்கள் மூலம் ஆண்டுக்கு 2.33 கோடி வருவாய் ஈட்டப்படும். இதில் 40 சதவீதம் (93.31 லட்சம்) மாநகராட்சிக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானத்தை ஒரு மணி நேரம் பயன்படுத்த ரூ. 120 கட்டணம் என்றால் மாதம் ரூ.7,500 ஒரு விளையாட்டுக்காக செலுத்த வேண்டும். அப்படி செய்தால் வசதி படைத்தவர்கள் மட்டுமே மைதானத்தை பயன்படுத்த முடியும். ஆகையால் இந்த தீர்மானத்தை கைவிட்டு விளையாட்டு மைதானங்களை மாநகராட்சி பராமரிக்க வேண்டும் என்று அதிமுக, விசிக உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர், புதிதாக மேம்படுத்தப்படும் விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். அதுபோல், விளையாட்டு மைதானத்தின் இடத்துக்கு ஏற்றார்போல் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றார்.
இதையும் படிங்க திமுக, பாஜக மறைமுக கூட்டணி; அதிமுக, த.வெ.க கூட்டணி ஏற்படுமா? எடப்பாடி பழனிச்சாமி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com