வயநாடு மறு சீரமைப்பு பணிகள்; நிதி வழங்காத மோடி அரசு: பிரியங்கா பரப்புரை!

Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக துவக்கியுள்ளார் பிரியங்கா காந்தி.

Published on: October 29, 2024 at 9:31 pm

Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பிரியங்கா காந்தி எல்.டி.எஃப்-ன் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சத்யன் மொகேரி மற்றும் கோழிக்கோடு மாநகராட்சியின் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். ஈங்கப்புழாவில் நடந்த கார்னர் மீட்டிங்கில் பேசிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்கு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு மக்கள் மற்றும் தேசத்தின் மீது மரியாதை இன்மையை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவரது கொள்கைளின் நிலைப்பாடு இதனை காட்டுகிறது. மோடி அரசின் கொள்கைகள் எப்போதும் ஐந்து ஆறு தொழில் நண்பர்களுக்கு மட்டுமே சாதகமான வகையிலேயே இருக்கும். அது மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.

வயநாடு நிலச்சரிவு பாதிப்பின்போது பிரதமர் மாவட்டத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்டார். அவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், பல மாதங்களாகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. என்று கூறினார்.

இதையும் படிங்க மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம்.. கேரளத்தில் என்ன நடக்கிறது? Kerala Records 469 Fishermen Deaths

11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம்.. கேரளத்தில் என்ன நடக்கிறது?

Kerala : கேரளத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். மேலும், 160 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது….

கேரள நடிகை மானபங்க வழக்கு.. இருவரின் தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! Kerala High Court

கேரள நடிகை மானபங்க வழக்கு.. இருவரின் தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!

Kerala High Court: 2017 கேரள நடிகை மானபங்க வழக்கில் குற்றவாளிகள் இருவரின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துவிட்டது….

கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட்.. நிலச்சரிவுக்கு ஒருவர் பலி.. பரபரப்பு தகவல்கள்! Red alert Kerala

கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட்.. நிலச்சரிவுக்கு ஒருவர் பலி.. பரபரப்பு தகவல்கள்!

Red alert Kerala : கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது; நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com