Raghupathi replies to Vijay | தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து பேசிய அவர், ” இதேபோன்று பல கூட்டங்களை திமுக நடத்தியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. விஜய் அதிமுகவை விமர்சிக்காதது அக்கட்சியின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவே. விஜய் பாஜகவின் ‘ஏ’ டீம்மோ ‘பி’ டீம்மோ இல்லை. அவர் பாஜகவின் சி டீம்” என்றார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை நேற்று நடத்தி முடித்தார். இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாநாட்டில் விஜய் ஊழல் மற்றும் குடும்ப மதவாத ஆட்சிகளுக்கு எதிராக பேசினார். மேலும், பெரியாரின் பெயரில் மக்களை சுரண்டும் குடும்பம் தான் நம் முதல் எதிரி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘திமுக ஓர் தேம்ஸ் நதி; விமர்சனங்களை தாங்கும் சக்தி உண்டு’; விஜய்க்கு ஆர்.எஸ் பாரதி பதில்!
Vijay questions in Vengaivayal case |வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்….
Erode East bypoll | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்….
நிவாரணம் ஒன்றுதான் தீர்வா என மு.க. ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி எழுப்பியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்