New Delhi | டெல்லியில் 17 வயது மாணவி ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
New Delhi | டெல்லியில் 17 வயது மாணவி ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
Published on: October 26, 2024 at 3:52 pm
New Delhi | டெல்லி ஜாமியா நகர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த 17 வயது மாணவி ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் ஒருவர் தொலைபேசியில் பேசுவதையும் மாணவி ஒருவர் கட்டடத்தின் மேலே இருந்து கீழே விழுவதையும் பார்க்க முடிகிறது. அந்த இடத்தில் தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டது. அதில், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாததால் ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்ட சிறுமி, “என்னை மன்னியுங்கள், என்னால் அதைச் செய்ய முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.
சம்பவம் குறித்து பேசிய அப்பகுதி மக்கள், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாததால் சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
டெல்லியில் மற்றொரு சோகமான சம்பவத்தில், 21 வயதான ஐஐடி டெல்லி மாணவர் தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் குமாஷ் யாஷ் ஆவார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க தலித்துகளை தாக்கிய உயர் சாதியினர் 98 பேருக்கு ஆயுள்: மரகும்பி சாதி கலவரத்தில் நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com