தித்திக்கும் தீபாவளி ; ரூ. 1600-ல் பெங்களூரு பயணம் ; ஏர் இந்தியா

Air India Express | ஏர் இந்தியா நிறுவனம் சென்னை-பெங்களூரு உட்பட குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரூ. 1600 க்கு விமானக் கட்டணம் அறிவித்துள்ளது.

Published on: October 24, 2024 at 12:59 pm

Air India Express | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏர் இந்தியா நிறுவனம் சென்னை-பெங்களூரு உட்பட குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வழித்தடங்களுக்கு தள்ளுபடியில் பயணக் கட்டணத்தை வழங்கும் ஃபிளாஷ் சேல் அறிவித்துள்ளது.

இந்த ஃபிளாஷ் விற்பனையில், ​​அதிக தள்ளுபடி விலையில் ரூ. 1,606-க்கு டிக்கெட்டுகள் கிடைக்கும். நவம்பர் 1 முதல் டிசம்பர் 10 வரை பயணிக்கத் திட்டமிடுபவர்களுக்கு இது பொருந்தும்.

டாடா குரூப் ஏர்லைன்ஸின்படி, சென்னை-பெங்களூரு, கொச்சி-பெங்களூரு, கவுகாத்தி-அகர்தலா, மற்றும் விஜயவாடா-ஹைதராபாத் உள்ளிட்ட சில வழித்தடங்களுக்கு சிறப்பு கட்டண தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வழித்தடங்களில் அக்டோபர் 27-ஆம் தேதிக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தள்ளுபடி கட்டணம் ரூ.1,606 ஆகும். மேலும், www.airindiaexpress.com என்ற ஏர் இந்தியாவின் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1,456 மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த பயணத்தில் ஒவ்வொரு பயணியும் 3 கிலோ சாமான்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 15 கிலோ வரை கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்ல, பயணிகள் கூடுதலாக ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com