Ranya Krishnan | இந்திய திரை உலகில் நடிகர் நடிகைகள் சேர்ந்து வாழ்வதும் பின்னர் விவாகரத்து என்ற பெயரில் பிரிவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கைகள் உதாரணமாக உள்ளன. இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனை சுற்றியும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதில் அவர் கணவர் வம்சியை விவாகரத்து செய்யப் போகிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
1980 காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி, தனக்கென தனி முத்திரை பதித்து இன்றளவும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அறிமுக முதலே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சினிமாவில் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பது, குணச்சித்திர வேடங்களில் தொடர்வது என பிசியாக நடித்து வந்தார்.
பின் நாட்களில் இவரின் நடிப்பில் மாபெரும் கவனம் ஈர்த்த படமாக படையப்பா திகழ்ந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு நிகரான ஓர் வில்லியாக படத்தில் நடித்திருப்பார். படையப்பா வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல என அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் மாஸ்.
இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் தோரலை கர்ஜனை நிஜ ராணியை கண்முன் கொண்டு நிறுத்தியது. அதன் பின்னர் மலையாளம் தெலுங்கு என தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது கணவர் வம்சியுடன் சேர்ந்து வாழ வில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதில்லை எனவும் அந்த தகவல் நீள்கிறது. இதை வைத்து இருவரும் பிரிய போவதாக இணையதளத்தில் சிலர் கருத்துக்கள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வதந்தி காட்டு தீ போல் பரவிய நிலையில் இதற்கு அவரது கணவர் வம்சி பதிலளித்துள்ளார். அதில் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது; என் காதுகளுக்கும் இது போன்ற தகவல்கள் வந்தன. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை” என மறுத்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணனின் விவாகரத்து குறித்த வதந்திகள் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.