பேங்க் ஆஃப் பரோடாவில் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

Bank Of Baroda Recruitment 2024 | பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி வாய்ப்புகள் வெளியாகி உள்ளன.

Published on: October 19, 2024 at 1:25 pm

Bank Of Baroda Recruitment 2024 | பேங்க் ஆஃப் பரோடா, ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் மற்றும் இளம் விண்ணப்பதாரர்களுக்கான வணிக நிருபர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்கு 2 காலியிடங்கள் உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு வங்கியில் தலைமை மேலாளர் பதவி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பதவி வகித்தவராக இருக்க வேண்டும்.
  • ஓய்வுபெற்ற எழுத்தர்கள், பாங்க் ஆஃப் பரோடாவுக்கு இணையான சிறந்த சாதனைப் பதிவுடன் ஜே.ஏ.ஐ.ஐ.பி. தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • அனைத்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களான விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கிராமப்புற வங்கி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இளம் விண்ணப்பதாரர்களைப் பொறுத்தவரை, கணினி அறிவியல் பட்டதாரியாக இருக்க வேண்டும். MSc (IT)/BE (IT), மற்றும் MCA/MBA போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள் ஆகும்.
  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது வரம்பு 21 முதல் 45 ஆண்டுகள் வரை ஆகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சூரத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • பதவிக்கால ஒப்பந்தம் 36 மாதங்கள் ஆகும். இது வருடாந்திர மதிப்பாய்விற்கு உட்பட்டது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் பாங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான bankofbaroda.in.இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய செய்யவேண்டும்.
  • இதனுடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்
  • பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பாங்க் ஆஃப் பரோடா,
மண்டல அலுவலகம், ஜபல்பூர் மண்டலம்,
பிளாட் எண். 1170, 1வது தளம்,
ஷிவ்முலா டவர், ஆஸ்தா மெடிக்கல் அருகில்,
ரைட் டவுன், ஜபல்பூர் – 482002, மத்திய பிரதேசம்

இதையும் படிங்க இந்திய ரயில்வேயில் 11 ஆயிரம் காலி பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com