அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!

Udhayanidhi stalin | தமிழக அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்வதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: October 19, 2024 at 9:29 am

Updated on: October 19, 2024 at 9:30 am

Udhayanidhi stalin | சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம் சத்திய குமார் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில், ” அரசு விழாக்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பொறித்த டீ சர்ட் உடன் கலந்து கொள்கிறார்.

இதன் மூலம், 2019 ஆம் ஆண்டு மாநில அரசு பிறப்பித்த அதிகாரப்பூர்வ ஆடை குறியீட்டை அவர் மீறுகிறார். ஆகவே அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் உரிய ஆடையில் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிய வருகிறது.

உதயநிதி ஸ்டாலின், அண்மையில் நடந்த அரசு விழா ஒன்றில் திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட் உடன் கலந்து கொண்டார். அப்போது இதற்கு எதிராக அதிமுக தலைவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். அரசு விழாக்களில் திமுக சின்னம் பொறித்த டீசட்டை உதயநிதி அணிந்து கொண்டு கலந்து கொள்ள கூடாது என அவர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இதற்கு திமுகவில் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பேசிய ஆர் எஸ் பாரதி, ” அதிமுகவினர் பொறாமையில் இவ்வாறு பேசுகின்றனர்; திமுக சின்னம் பொறித்த டீ சர்ட் உடன் அரசு விழாவில் கலந்து கொள்வதில் என்ன தவறு? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு; அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!
RMC Chennai forecast chance of rain in Tamil Nadu today

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு; அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com