Sachin Tendulkar | தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு சச்சின் தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sachin Tendulkar | தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு சச்சின் தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: October 10, 2024 at 5:14 pm
Sachin Tendulkar | தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு சச்சின் தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் சச்சின் தெண்டுல்கர், “ரத்தன் டாடாவுடன் பழகியதை எண்ணி, நான் பெரும் பாக்கியம் பெற்றவனாக உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்று நான் உணரும் சோகத்தை அவரை சந்திக்காதவர்களும் உணருகின்றனர்; உங்கள் மனம் இறைப்பாறட்டும் திரு டாடா. நீங்கள் கட்டியெழுப்பியுள்ள நிறுவனங்கள் உங்களது குணங்களை என்றென்றும் பறைசாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தை உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரியவர். இவர், தனது 86 வயதில் காலமானார்.
மும்பையில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை புதன்கிழமை (அக்.9, 2024) இரவு மோசமானது. இந்த நிலையில் அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com