₹.13,500 கோடி, ₹.1 லட்சம் கடன்; 4 லட்சம் பேர் காத்திருப்பு: வருமா விஸ்வகர்மா திட்டம்?

Vanathi Srinivasan | தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வகர்மா திட்டத்துக்காக 4 லட்சம் பேர் காத்திருப்பதாக பா.ஜ.கவின் நாகராஜ் கூறியுள்ளார்.

Published on: October 4, 2024 at 5:37 pm

Vanathi Srinivasan | கைவினைக்கலைஞர்களை மேம்படுத்த தமிழக அரசு விஸ்வகர்மா திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் G.K. நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசு கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊக்குவிக்க ரூ.13,500 கோடியில் விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தச்சர்,பொற்கொல்லர் உள்ளிட்ட 18 வகையான கைத்தொழில் புரிவோர் ரூ.1 இலட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையில்லாக் கடன் பெற முடியும்.

தமிழ்நாட்டில் மட்டும் 4 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் தங்களைப் பதிவுசெய்து வங்கியில் பணம் வருவதற்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ இது குலத்தொழில் திட்டம் என்றுகூறி திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

பல மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதிகளவில் பெண்கள் பயன்பெற்று வரும் வேளையில் தமிழகத்தில் இத்திட்டத்தை புறக்கணிப்பது திமுக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இதுகுறித்து கோவை ராஜவீதி மீட்டிங் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இத்திட்டத்தின் பயன்குறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் தமிழக பொறுப்பாளர் G.K.நாகராஜ் கலந்து கொண்டு இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த காலதாமதப்படுத்தினால், புறக்கணித்தால் அடுத்தகட்டமாக கோவையில் கைவினைக்கலைஞர்களை ஒன்றுதிரட்டி விரைவில் மாபெரும் பட்டினிப்போராட்டத்தை நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர்.. மத்திய அமைச்சர் எல். முருகன் L Murugan On Kamaraj

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர்.. மத்திய அமைச்சர் எல். முருகன்

L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்….

பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசு வளர்ச்சியைத் தடுக்கிறது!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு Parandur Row

பரந்தூர் விமான நிலையம்: தவெக அரசு வளர்ச்சியைத் தடுக்கிறது!” – நயினார் நாகேந்திரன்

Parandur Row : பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என தமிழக பாஜக…

மேகதாது அணை விவகாரம்.. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா? காங்கிரஸூக்கு பா.ஜ.க கேள்வி Nainar Dares Congress

மேகதாது அணை விவகாரம்.. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா? காங்கிரஸூக்கு பா.ஜ.க

Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு…

தி.மு.க, பா.ஜ.க கூட்டணியா? இஸ்லாம் மதம் மாறினால் இடஒதுக்கீடு இல்லையா? தமிமுன் அன்சாரி கொந்தளிப்பு! M. Thamimun Ansari

தி.மு.க, பா.ஜ.க கூட்டணியா? இஸ்லாம் மதம் மாறினால் இடஒதுக்கீடு இல்லையா? தமிமுன் அன்சாரி

M. Thamimun Ansari : தி.மு.க., பா.ஜ.க கூட்டணி என்று திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்….

வெங்கட நாராயணா நியமனம்.. தமிழ் மக்களுக்கு துரோகம்.. நயினார் நாகேந்திரன் Nainar Nagendran

வெங்கட நாராயணா நியமனம்.. தமிழ் மக்களுக்கு துரோகம்.. நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: நயினார் நாகேந்திரன் வெங்கட நாராயணாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், இது தமிழ் மக்களுக்கு நேரடியான துரோகம் எனக் கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com