அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை!

அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், அவரின் மனைவி மற்றும் 2 மகள்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Published on: October 3, 2024 at 11:04 pm

Govt School Teacher Shot Dead In Amethi | உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஒரு வயது கைக்குழந்தை மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் இன்று (செப்.3, 2024) சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதான சுனில் மற்றும் அவரது மனைவி பூனம் (32) ஆவார். இவர்கள் பவானியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். சுனில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் அவர் உள்பட முழு குடும்பமும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, அமேதி காவல் கண்காணிப்பாளர் (SP) அனூப் குமார் சிங், “சுனில் ரேபரேலியை பூர்வீகமாகக் கொண்டவர். பன்ஹவுனாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தார். முதற்கட்ட விசாரணையில், சந்தன் வர்மா என்பவர் மீது 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர். இந்த ஈவ் டீசிங் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், “அமேதி மாவட்டத்தில் இன்று நடந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

துயரத்தின் இந்த நேரத்தில், உத்தரப் பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து யாராவது இருக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க

சிறுமியின் முன் உடலுறவு; பாய்ந்த போக்சோ: கேரள நீதிமன்றம் அதிரடி Kerala HC says Sex In Front Of Minor Amounts to Harassment

சிறுமியின் முன் உடலுறவு; பாய்ந்த போக்சோ: கேரள நீதிமன்றம் அதிரடி

Kerala High Court | சிறுமியின் முன் உடலுறவில் ஈடுபட்ட நபர் மீதான போக்சோ வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது….

சிறுநீர் சப்பாத்தி; வைரலான வீடியோ: சிக்கிய பணிப்பெண்!

சிறுநீர் சப்பாத்தி; வைரலான வீடியோ: சிக்கிய பணிப்பெண்!

Uttar Pradesh | வீட்டின் உரிமையாளருக்கு தனது சிறுநீரில் சப்பாத்தி சமைத்து கொடுத்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்….

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு: கனிமொழி பங்கேற்பு!

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு: கனிமொழி பங்கேற்பு!

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றார்….

எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் அப்துல் கலாம் – பிரதமர் மோடி he looked for challanges pm modi remembers abdul kalam

எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் அப்துல் கலாம் – பிரதமர் மோடி

PM Modi Remembers Abdul Kalam | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு lawrence bishnois gang claims responsibility for baba siddiques murder

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்

Baba siddique murder | மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com