Congress MP Manickam Tagore | தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுவிலக்கு என்பது காந்தியும் காமராஜரும் என காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தவரை தமிழகத்தில் மது என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது இருக்கும் காலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுடைய குறிக்கோளும் மதுவை ஒழிப்பது.
ஆனால் அரசியல் பலம் என்பது வேறு கொள்கையின் ஈடுபாடு என்பது வேறு. அரசியல் பலத்தை பொறுத்தவரை மக்களின் எண்ணங்கள் எப்போது மாறுகின்றதோ, மக்கள் எப்போது எங்களுடைய உண்மையாக எண்ணத்தை புரிந்து கொள்கிறார்களோ, எப்போது எங்களுடைய வலிமையை புரிந்து கொள்கிறார்களோ அன்று காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மீண்டும் இந்த கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது என்றார்.
கடந்த சில வாரங்களாக விசிக -வின் மது விலக்கு தொடர்பான வாதங்கள் தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க
GK vasan: மேகதாதுவில் காங்கிரஸ் அரசாங்கம் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் தடுக்க வேண்டும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார்….
Selva Perunthagai : மகளுக்கு திருமணம் வைத்துள்ளேன்; அதுவரை காங்கிரஸ் மாநில தலைவராக தொடர அனுமதியுங்கள் என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
P Chidambaram: புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்….
DMK Congress split : தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு இல்லை; காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்…
P. Chidambaram: “மாநில கட்சிகள் அந்தந்த காலங்களில் காங்கிரஸை விட வலிமையானவை என்பதை மறுக்கவில்லை” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்