Bail to Maha Vishnu | சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் மறுபிறப்பு குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகின.
இதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகா விஷ்ணு-ஆசிரியர் வார்த்தை மோதல் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்….
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சி சென்ற விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது….
சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்….
வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது….
மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்….
சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்