Vairamuthu met M K Stalin | “முதலமைச்சர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த டிகாஷன் இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வைரமுத்து இன்று (அக்.3,2024) முகாம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ’25 நிமிடங்கள் உள்ளம் திறந்து உரையாடினோம்” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து வைரமுத்து,
முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அவரது அண்மைக்காலத் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துச் சொன்னேன். 25 நிமிடங்கள் உள்ளம் திறந்து உரையாடினோம். ஒரு நல்ல உரையாடல் என்பது நேர்த்தியான நெறிமுறைகள் கொண்டது. ஒரே மாதிரியான ஈடுபாடு இருவர்க்கும் வாய்க்க வேண்டும்.
அறையின் கதவுகள் பூட்டப்பட்டு இருதயத்தின் கதவுகள் திறந்திருக்க வேண்டும். ஒருவர் பேசிமுடித்து முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் அதை ஊடறுக்காத உரையாடல் நாகரிகம் வேண்டும். இந்த மூன்றும் உடையவர் முதலமைச்சர். அமெரிக்கா முதல் அப்பல்லோ வரையில் பிரதமர் முதல் துணைமுதல்வர் வரையில் அமைச்சரவை மாற்றம் முதல் அரசியல் விமர்சனம் வரையில்..
தாழ்ப்பாள் இல்லாத தமிழில் பல்வேறு எண்ணங்கள் பரிமாறிக்கொண்டோம். ஓர் ஆட்சியாளனுக்குரிய ஒரே ஒரு பெரும்பலம் ‘உற்சாகம்’. அந்த உற்சாகம் குறையாமல் உலா வாருங்கள் என்று வாழ்த்தி விடைகொண்டேன். முதலமைச்சர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த டிகாஷன் இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
R V Udayakumar: அடுத்த விஜயகாந்த் இவர்தான் என தனது மனதில் பட்டதை ஓபனாக பேசியுள்ளார் சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமார்….
Devi Sri Prasad : எனது பாடலை ஹாலிஉட்டில் காப்பி அடிச்சுட்டாங்க என புகார் அளிக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்….
Actress Anjali: நடிகை அஞ்சலி சிவா நடிப்பில் பறந்து போ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜூலை நான்காம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது….
Actor Krishna arrested: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
Actor Krishna undergoes medical examination: போதைப் பொருள் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்